சில்வர் குடத்தில் தலையை சிக்க வைத்த சிறுவன் : 2 மணி நேரம் உயிருக்கு போராட்டம்!!

14 May 2021, 1:27 pm
Silver Vessel Boy - Updatenews360
Quick Share

தெலுங்கானா : சில்வர் குடத்தில் தலையை சிக்க வைத்த 6 வயது சிறுவனை 2 மணி நேரம் போராடி கிராம மக்கள் மீட்டனர்.

பிரபல தமிழ் திரைப்படமான ஆண்பாவம் படத்தில் வருவது போன்ற காட்சி தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் அரங்கேறியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டத்தில் உள்ள சங்கர பட்டினத்தைச் சேர்ந்த ராஜூ – காவியா தம்பதியருக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர் .

வீட்டின் பின்புறம் உள்ள காலி இடத்தில் தனது தங்கையுடன் விளையாடிக் கொண்டிருக்கும்போது ரோகித் என்ற 6 வயது சிறுவன் திடீரென்று ஸ்டீல் குடத்தை தனது தலையில் வைத்து விளையாடி கொண்டிருந்தார்.

அப்போது குடம் தலையில் மாட்டி கொண்டு வரவில்லை. நீண்ட நேரமாக முயற்சி செய்தும் குடம் வராத நிலையில் பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் சிறுவனின் தலையில் உள்ள ஸ்டீல் குடத்தை எடுக்க முயன்றும் வரவில்லை.

காவல்துறைக்கு தகவல் அளித்த பின், போலீசார் உதவியுடன் குடத்தை கட்டர் உதவியுடன் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு கட் செய்து தனியாக பிரித்து 6 வயது சிறுவனை மீட்டனர்.
பின்னர் காவல்துறையினர் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உள்ளதால் பள்ளி திறக்கப்படாத நிலையில் குழந்தைகள் விளையாடுவதை பெற்றோர்கள் கவனிக்க வேண்டும் என காவல்துறையினர் அறிவுரை கூறினர்.

Views: - 209

0

0