கடை வியாபாரியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சிறுவர்கள் : டெல்லியில் பகீர் சம்பவம்!!

14 January 2021, 5:07 pm
Delhi Shot- Updatenews360
Quick Share

டெல்லி : முன்விரோதம் காரணமாக கடை வியாபாரியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சிறுவர்களின் சம்பவம் அதிர்ச்சியை ஏறபடுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள ஜாப்ராபாத் பகுதியை சேர்ந்த கடை வியாபாரியான அப்சல் என்பவருக்கும் அதேபகுதியை சேர்ந்த சிறுவர்கள் இரண்டு பேருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது.

இதனால் கோபமடைந்த சிறுவர்கள் கடை வியாபாரியை பழி வாங்க திட்டம் தீட்டி வந்தனர். இந்த நிலையில் அவர்கள் போட்ட பிளான் படி துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல ஏதுவாக சந்தர்ப்பம் அமைந்தது.

அதன்படி கடந்த சனிக்கிழமை இரவு சாலையில் நின்று கொண்டிருந்த அப்சலை துப்பாக்கியை எடுத்து சிறுவர்கள் சர்வ சாதாரணமாக சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் சிறுவர்களை கைது செய்து துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 9

0

0