தினமும் இரவு காணாமல் போகும் பசு மாடு : சிசிடிவி வைத்து ஆராய்ந்த போது காத்திருந்த அதிர்ச்சி!!

By: Udayachandran
16 October 2020, 2:02 pm
Cow Harrassed - Updatenews360
Quick Share

கேரளா : தினமும் இரவு காணாமல் போகும் பசு மாட்டை காலையில் உரிமையாளர் அழைத்து வருவது வாடிக்கையாக இருந்த நிலையில் இதற்கு பின் உள்ள சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள குன்னமங்கலம் பகுதியை சேர்ந்த பசு ஒன்று கொட்டகையில் இருந்து அடிக்கடி காணாமல் போய் உள்ளது. அடிக்கடி காணாமல் போகும் பசுவை உரிமையாளர், வேறு பகுதியில் இருந்து பிடித்துக் கொண்டு வருவது வழக்கமாக இருந்தது.

இதையடுத்து இது குறித்து போலீசிடம் புகார்த அளித்த உரிமையாளர், வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்த முடிவு செய்தார். இதையடுத்து சிசிடிவி காட்சியில் ஒரு நபர் கொட்டகையில் இருந்து மாட்டை அவிழ்த்து ஓட்டி சென்றது தெரிந்தது.

உடனே உரிமையாளர் இது குறித்து போலீசாரிடம் புகார் தெரிவித்து சிசிடிவி காட்சியை ஒப்படைத்துள்ளார். இதையடுத்து சிசிடிவி காட்சியின் அடிப்படையில் அந்த நபரை கைது செய்து போலீசார் விசாரித்தனர். அப்போது விசாரணையில், அனைவரும் தூங்க சென்ற பிறகு, கட்டி வைக்கப்பட்ட பசு மாட்டை மறைவான இடத்திற்க அழைத்து சென்று பாலியல் உறவு கொண்டதாக அந்த காமுகன் கூறியுள்ளான்.

மேலும் பசுவை அதே இடத்தில் விட்டுவிட்டு சென்று விடுவது வாடிக்கையாக வைத்துள்ளார். இதையடுத்து பசு மாட்டை பரிசோதித்த போது இயற்கைக்க மாறான பாலியல் உறவு வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இந்தியாவில் பாலியல் பலாத்காரம் அதிகரித்து வரும் நிலையில், விலங்குக்கு மனிதன் பாலியல் கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது.

Views: - 109

0

0