“இனி EMI கேட்டு எவனாவது வருவீங்க“ : கடனுக்கு வாங்கிய சொந்த ஆட்டோவை கொளுத்திய ஓட்டுநர்!!

25 January 2021, 4:41 pm
Auto Fired - Updatenews360
Quick Share

தெலுங்கானா : வங்கி ஊழியர்கள் கொடுத்த நெருக்கடியால் கடனுக்கு வாங்கிய ஆட்டோவை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய ஓட்டுநர் காவல்நிலையத்தில வங்கி ஊழியர்கள் மீது புகார் கொடுத்துள்ளார்.

தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் பிரவீன்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் 2019ஆண்டு தனியார் பைனான்ஸ் நிறுவனம் ஒன்றில் தவணை முறையில் ஆட்டோ ஒன்றை வாங்கி வாடகைக்கு ஓட்டி வருகிறார்.

சில நாட்களாக வங்கி ஊழியர்கள் ஆட்டோ ஓட்டுனர் பிரவீன் குமாருக்கு பணம் கட்டுவது குறித்து தொல்லை கொடுத்து வந்துள்ளனர். அதனை தாங்க முடியாமல் ஆட்டோ உரிமையாளர் தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம் காவல் நிலையம் முன்பு ஆட்டோவின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தினார்.

வங்கி ஊழியர்கள் கொடுத்த டார்ச்ரால் தனது வாழ்க்கை பற்றி கவலைப்படாமல் தனக்கு ஊதியம் கொடுக்கும் ஆட்டோவை கெளுத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து காவல் நிலையத்தில் வங்கி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரவீன் குமார் புகார் ஒன்றை அளித்துள்ளார். இதன் குறித்து வாரங்கல் மாவட்ட காவல்துறை விசாரித்து வருகின்றனர்

Views: - 6

0

0