விடாத அமலாக்கத்துறை… எம்பி வீட்டில் அதிரடி ரெய்டு : சிக்கலில் ஆளுங்கட்சி.. மீண்டும் அதே வழக்கில்…!!!

Author: Udayachandran RadhaKrishnan
4 October 2023, 9:58 am
ED Raid - Udpatenews360
Quick Share

விடாத அமலாக்கத்துறை… எம்பி வீட்டில் அதிரடி ரெய்டு : சிக்கலில் ஆளுங்கட்சி.. மீண்டும் அதே வழக்கில்…!!!

மதுபான கொள்கையை வகுப்பதில் ஊழல் செய்ததால் புகார் வைக்கப்பட்டு உள்ளது. இதே வழக்கில் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகிறது. அமலாக்கத்துறை விசாரணை செய்யும் அதே நாளில் இன்று சஞ்சய் சிங் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளார்.

துணை முதல்வராக இருந்த எம்எல்ஏ மணீஷ் சிசோடியா கடந்த மார்ச் 26-ம் தேதி சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார். சுமார் 8 மணி நேர விசாரணைக்குப் பிறகு இவர் கைது செய்யப்பட்டார். டெல்லியில் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பரில் புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது.

இதில்தான் முறைகேடு நடந்ததாக புகார் வைக்கப்பட்டது. இந்தக் கொள்கையில் இடம் பெற்றிருந்த வரிக்குறைப்பு உள்ளிட்ட முக்கிய சலுகைகள் குறித்த விவரங்கள் முன்கூட்டியே கசிய விடப்பட்டதாகவும் இதன் மூலம் மதுபான ஆலை அதிபர்கள் விற்பனையாளர்கள் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தாகவும் குற்றச்சாட்டு எழுந்தந்து.
முக்கியமாக இதில் பல கோடி கை மாறியது. பல கோடி லஞ்சம் வாங்கப்பட்டது என்றெல்லாம் புகார் வைக்கப்பட்டது. கைமாறாக டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மணீஷ் சிசோடியாவிற்கு இதுவரை பெயில் கிடைக்கவில்லை.

இன்று உச்ச நீதிமன்றத்தில் அவரின் வழக்கு விசாரணைக்கு வருகிறது. இந்த நிலையில்தான் இன்று டெல்லியில் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகிறது. ஆம் ஆத்மி எம்எல்ஏ மணீஷ் சிசோடியா பெயில் வழக்கு இன்று விசாரிக்கப்பட உள்ளது.

அவரின் வீடுகள் அலுவலகங்களில் இந்த ரெய்டுகள் நடந்து வருகின்றன. இந்த வழக்கில் ஏற்கனவே 2000 பக்கத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதில் மணீஷ் சிசோடியா மீது கடுமையான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில்தான் டெல்லியில் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகிறது.

Views: - 284

0

0