டெல்லியில் கொரோனா பரிசோதனைகளுக்கு ரூ.800 கட்டணம் நிர்ணயம்..!!

1 December 2020, 7:45 am
coronavirus test - updatenews360
Quick Share

டெல்லியில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகளுக்கான விலை ரூ.800ஆக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் கொரோனா நோய்த்தொற்று அதிகரிப்பதை தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. நோய்த்தொற்றை கண்டறிவதற்கான பரிசோதனைக்கு தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில் செலவு அதிகம் ஆவதால் பரிசோதனை செய்துகொள்ள மக்கள் தயங்குகின்றனர்.

Arvind_Kejriwal_UpdateNews360

இந்நிலையில், நேற்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மக்களின் வசதிக்காக கொரோனா பரிசோதனை கட்டணத்தை அதிரடியாக குறைத்து உத்தரவிட்டு உள்ளார். இதற்கு முன், டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில் ரூ.2 ஆயிரத்து 400க்கு பரிசோதனை செய்யப்பட்டு வந்தது.

ஆனால் முதலமைச்சர் கெஜ்ரிவால் உத்தரவின்படி இனிமேல் ரூ.800க்கு பரிசோதனை மேற்கொள்ளப்படும். குறைக்கப்பட்ட இந்த கட்டணம் குறித்து தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களின் முன் விளம்பர பலகை வைக்கவும் கெஜ்ரிவால் உத்தரவிட்டு உள்ளார்.

Views: - 0

0

0