கண்மூடித்தனமான கடவுள் நம்பிக்கை : பூஜை என கூறி தக்காளி வியாபாரியிடம் பணம், நகை அபேஸ் செய்த கும்பல்!

23 January 2021, 5:21 pm
6 Arrest - Updatenews360
Quick Share

ஆந்திரா : போலிச்சாமியார் வேடமிட்டு தக்காளி வியாபாரிகள் வீட்டில் பணம் மற்றும் நகை கொள்ளையடித்து சென்ற 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனபள்ளியில் தக்காளி வியாபாரம் செய்து வருபவர்கள் முரளி மற்றும் விஸ்வநாதன். இவர்கள் இருவரும் சகோதரர்கள். சில நாட்களாக வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் சிலரின் பேச்சைக் கேட்டு பூஜை நடத்த உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த பூசாரிகளை தேடி வந்தனர்.

இவர்களை நோட்டமிட்ட ஒரு கும்பல், ஜனவரி 19ஆம் தேதி 4 பூஜைகளை நடத்துவோம் என கூறி அவர்களிடம் இருந்து 2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான தங்க ருத்ராட்சண மாலையை கழட்டி வைக்குமாறு கூறியுள்ளனர். அந்த ருத்ராட்ச மாலை வைத்து பூஜை நடத்தினால் வியாபாரத்தில் நல்ல வருமானம் கிடைக்கும் என்று ஆசைவார்த்தை கூறி உள்ளனர்.

ஆசை வார்த்தையை நம்பிய சகோதரர்கள் அவரிடம் இருந்த ருத்ராட்ச மாலையை கழட்டி வைத்துவிட்டு பூஜை நடக்கும்போது சகோதரர்கள் இருவரும் அருகில் இருக்கக் கூடாது என பூசாரிகள் தெரிவித்திருந்த நிலையில் இவர்கள் இருவரையும் பக்கத்தில் இருக்கும் அறையில் தனித்தனியாக பூட்டி வைத்துவிட்டு வீட்டிலிருந்த 1 லட்ச ரூபாய் பணம், கார் மற்றும் 2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான ருத்ராட்ச மாலையும் ஜனவரி 19ஆம் தேதி திருடி சென்றனர்.

இதுகுறித்து மதனபள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீசார் தனியாக குழு அமைத்து ஆசாமிகளை தேடி வந்த நிலையில் நேற்று மதனப்பள்ளி கர்நாடக நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடி தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்தின் அடிப்படையில் 6 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் விசாரணையின் போது இவர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. அவர்கள் போலி சாமியார் வேடமிட்டு பல்வேறு இடங்களில் மோசடி செய்ததும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து ருத்ராட்ச மாலை, ஒரு லட்சத்தி ஐம்பதாயிரம் ரொக்கம் மற்றும் ஒரு வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனை அடுத்து 6 பேரை கைது செய்தனர். இவர் மீது வழக்கு பதிவு செய்து சித்தூர் மாவட்ட மதனப்பள்ளி நீதிமன்றத்தில் இவர்களை ஆஜர்படுத்தினர்.

Views: - 7

0

0