காதலை ஏற்க மறுத்த இளம்பெண் : படுக்கையறைக்கே சென்று கழுத்தை அறுத்த காதலன்.. தெலுங்கானாவில் கொடூரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
28 October 2021, 8:34 pm
Teleangana Murde rattempt -Updatenews360
Quick Share

தெலுங்கானா : காதலிக்க மறுத்த இளம்பெண் தூங்கி கொண்டிருந்த போது படுக்கையறையில் புகுந்து கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள கெச்பவுலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று இரவு ருக்கிசிங் (வயது 21) என்ற இளம்பெண் தன்னுடைய வீட்டில் உள்ள படுக்கை அறையில் தூங்கி கொண்டிருந்தார்.

நேற்று நள்ளிரவுக்கு மேல் அவருடைய உறவினரான பிரேம் சிங் திடீரென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து ருக்கிசிங் படுக்கை அறைக்குள் சென்று தன்னிடம் இருந்த கத்தியால் ருக்கிசிங் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றார்.

அலறல் சத்தத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் பிரேம் சிங்கை பிடிக்க முயன்றனர். அப்போது ருக்கிசிங் கை, கால்களிலும் பிரேம்சிங் கத்தியால் வெட்டி காயப்படுத்தினார்.
இந்த நிலையில் அவரை பிடித்த ருக்கிசிங் பெற்றோர் தர்ம அடி கொடுத்து போலீசாரை வரவழைத்து அவர்களிடம் ஒப்படைத்தனர். பிரேம் சிங்கை கைது செய்த போலீசார் அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பிரேம் சிங்கின் காதலை ருக்கிசிங் ஏற்க மறுத்ததால் அவரை பிரேம் சிங் கொலை செய்ய முயன்றது தெரிய வந்துள்ளது. இரண்டு பேரும் உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

படுகாயமடைந்த ருக்கிசிங் அந்தப் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

Views: - 276

0

0