‘நீ செத்துப் போ.. நா வீடியோ எடுக்கற’ : மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்ததை வீடியோ எடுத்த கணவன்!!!

Author: Udayachandran RadhaKrishnan
23 September 2021, 10:53 am
Wife Suicide Hubby Video 2 -Updatenews360
Quick Share

ஆந்திரா : மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதை வீடியோ எடுத்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்த கணவனை போலீசார் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் ஆத்மகூரை சேர்ந்த தம்பதி பென்சலையா, கொண்டம்மா. இவரின் கணவர் பென்சலையா. ஆத்மகூரில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் காவலாளியாக பணியில் இருக்கிறார்.

மனைவி நடத்தை மீது சந்தேகம் கொண்ட பென்சலையா அடிக்கடி கொண்டம்மாவுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரண்டு பேருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

அப்போது கொண்டம்மா கணவன் கண்முன்னே வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு கொண்டார். அவரை தடுக்க வேண்டிய கணவன் பென்சலையா, நான் தடுக்க மாட்டேன் நீ தூக்கு மாட்டி கொள் என்று கூறி வீடியோ எடுத்தார்.

தூக்கு மாட்டி கொண்ட மனைவி உடல் துடிதுடித்து இறப்பது வரை பென்சலையா வீடியோ எடுத்தார். இந்த நிலையில் கொண்டம்மா தற்கொலை செய்து கொண்டது பற்றிய தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று அவருடைய உடலை கைப்பற்ற பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தினர்.

போலீசார் நடத்திய விசாரணையில் கொண்டம்மா தூக்கு போட்டு கொண்டபோது பென்சலையா வேடிக்கை பார்த்து கொண்டிருந்ததுடன் வீடியோ எடுத்ததும் தெரியவந்தது. எனவே அவரை கைது செய்த போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Views: - 464

0

0