லடாக் எல்லையில் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை – சீனாவின் குற்றச்சாட்டுக்கு இந்திய ராணுவம் பதில்..!

8 September 2020, 11:57 am
Quick Share

லடாக் கட்டுப்பாட்டு எல்லை கோடு பகுதியில் துப்பாக்கி சூடு ஏதும் நடத்தவில்லை என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்தியா, சீனா எல்லை பகுதியான லடாக்கில் எல்லை பிரச்னை தீவிரம் அடைந்துள்ளது. சமீபத்தில் சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் அத்து மீறி நுழைந்து ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியதாக இந்திய ராணுவம் குற்றம் சாட்டியது.

இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே அமைதி பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது, இங்கு அமைதி பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்து விட்டு எல்லையில் அத்து மீறுவதா என இந்தியா தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு சீனா தரப்பில் எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை. இந்த சூழலில் நேற்று இரவு இந்தியா – சீனா ராணுவத்தினர் இடையே துப்பாக்கி சண்டை நடந்ததாகவும், இந்தியா எல்லை தாண்டி தாக்குதல் நடத்தியதாகவும் சீன ராணுவ செய்தி தொடர்பாளர் குற்றம் சாட்டினார்.

இதற்கு இந்திய ராணுவம் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில், எல்லை தாண்டி இந்திய ராணுவம் நுழையவில்லை எனவும் லடாக் கட்டுப்பாட்டு பகுதியில் துப்பாக்கி சண்டை நடைபெறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 0

0

0