வங்க கடலில் தொடங்கியது இந்திய வங்காளதேசம் கடற்படைகளின் கூட்டுப்பயிற்சி!!!

Author: Aarthi
4 October 2020, 8:12 am
bay of bengal - update news360
Quick Share

இந்திய வங்காளதேசம் கடற்படைகளின் கூட்டுப்பயிற்சி வங்க கடலில் தொடங்கியுள்ளது.

இந்திய போர்க்கப்பல்களான கில்தன், குக்ரி ஆகியவையுடன் இணைந்து வங்காள தேசத்தின் புரோட்டி, ஹேலோ, அபுபக்கர், MPA ஆகிய போர்க்கப்பல்கள் பல்வேறு வகை பயிற்சிகளை மேற்கொண்டன.

இருநாட்டுபோர்க் கப்பல்களும் கடலோர பாதுகாப்புக்களுக்கான பயிற்சியை இன்றும் நாளையும் நடத்துகின்றன. கடல்வழியாக தீவிரவாத ஊருடுவல்களை தடுபப்து, பேரிடர் காலத்தில் உயிர் காக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது, சரக்கு கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிப்பது, மீனவர் பாதுகாப்பு உள்டப பல்வேறு பயிற்சிகள் இதில் இடம்பெறுகின்றன.

வங்காள தேச தலைவர் முஜிபர் ரகுமானின் நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி இந்தியாவுடன் வங்காள தேச கடற்படை கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபட்டிருப்பதாக இந்திய கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

Views: - 44

0

0