ஊருக்குள் புகுந்த சிறுத்தை : மாட்டுத் தொழுவத்தில் சீறிப் பாய்ந்து அட்டகாசம்!! (வீடியோ)

21 October 2020, 6:00 pm
cheetah - Updatenews360
Quick Share

மும்பை : ஊருக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று அருகே இருந்த மாட்டுத் தொழுவத்தில் புகுந்த சிறுத்தை சீறிய காட்சி வைரலாகி வருகிறது.

வனப்பகுதியில் இருந்து வழிமாறி வந்த சிறுத்தை ஒன்று மும்பை அருகே உள்ள ஆரே பால் காலனியில் மாட்டுத் தொழுவத்தில் புகுந்தது.

அங்கிருந்தவர்கள் சிறுத்தை கண்டு பீதியடைந்து, சிறுத்தையை விரட்ட முயன்றனர். ஆனால் சிறுத்தை கோபமாக சீறியது. இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் சிறுத்தையை விரட்ட மக்கள் சப்தம் போட்டனர்.

ஆனால் சிறுத்தை அவர்களிடம் ஆக்ரோஷமாக சீறிய காட்சிகள் நடுநடுங்க வைத்துள்ளது. இதையடுத்து தகவல் அறிந்த வந்த வனத்துறையினர் சிறுத்தையை மீட்டு அருகே உள்ள வனப்பகுதிக்குள் விட்டனர். இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை.

Courtesy : ANI

Views: - 20

0

0