தூங்கிக்கொண்டிருந்த இளைஞர் நெஞ்சின் மேல் கால் வைத்த சிங்கம்! கண்விழத்த போது காத்திருந்த அதிர்ச்சி.!!

17 August 2020, 1:00 pm
Gujarat Lion- Updatenews360
Quick Share

குஜராத் : வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தவரின் நெஞ்சின் மேல் சிங்கம் கால் வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

வனத்தில் உள்ள விலங்குகளில் ராஜாவாக கருதக்கூடிய விலங்கு சிங்கம். சிங்கத்தை கண்டால் மனிதனே பயப்படும் போது மற்ற விலங்குகளை குறைகூறி பயனில்லை. சிங்கத்தின் கர்ஜனையை கேட்டால் சத்தத்தால் உயிர் நாடியே நின்று விடும்.

ஆனால் குஜராத்தில் தூங்கி கொண்டிருந்தரின் நெஞ்சின் மேல் சிங்கம் கால் வைத்த சம்பவம் அம்ரேலி மாவட்டம் அபாரம்பரா என்னும் கிராமத்தில் அரங்கேறியுள்ளது. அந்த கிராமத்தில் விபுல் கேலையா என்ற இளைஞர் ஒருவர் இரவு நேரத்தில் தூங்கியுள்ளார்.

ஆழ்ந்த தூக்கத்தின் போது யாரோ ஏதோ ஒரு எடையை நெஞ்சில் மீது வைப்பதை உணர்ந்தார். உடனே கண்விழத்து பார்த்த போது ஒரு சிங்கம் நெஞ்சின் மீது கால் வைத்து அமர்ந்துள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

தூக்க கலக்கத்தில் தைரியமாக மன உறுதியுடன் பதறாமல் இருந்த இளைஞர், அந்த சிங்கத்தை தள்ளிவிட்டுள்ளார். ஆனால் அந்த சிங்கமோ எதுவும் செய்யாமல் காட்டிற்குள் சென்றது. பசி எது கிடைத்தாலும் சாப்பிட முடியமா என்ன. இது அந்த சிங்கத்திற்கு தெரிந்திருக்கும் போல என இளைஞர் கூறினார்.

Views: - 37

0

0