வீட்டிற்கு வெளியில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞர் மாயம்.. அருகே இருந்த உருவபொம்மை! பீதியில் கிராமம்!!

10 June 2021, 5:39 pm
Youth Missing - Updatenews360
Quick Share

தெலுங்கானா : வாரங்கல் மாவட்டத்தில் நேற்று இரவு வீட்டுக்கு வெளியே தூங்கி கொண்டிருந்த இளைஞர் மாயமான நிலையில் மந்திரவாதிகள் தூக்கிச்சென்று நரபலி கொடுத்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள உப்பரபள்ளி கிராமத்தை சேர்ந்த 28 வயது இளைஞர் சதீஷ். நேற்று இரவு வழக்கம்போல் வீட்டிற்கு வெளியே கட்டிலில் படுத்து தூங்கி கொண்டிருந்தார்.

இந்தநிலையில் விடியற்காலை முதல் அவரை காணவில்லை. அவர் படுத்திருந்த இடத்தின் அருகே நரபலி கொடுப்பதற்காக பயன்படுத்தப்படும் உருவபொம்மை வைக்கப்பட்டு கோலம் போடப்பட்டிருந்தது.

எனவே அவரை இரவு நேரத்தில் மந்திரவாதிகள் நரபலி கொடுப்பதற்காக தூக்கி சென்று இருக்கலாம் என்று கருதப்படும் நிலையில் இதுபற்றி சதீஷ் குடும்பத்தினர் போலீசாருக்கு புகார் அளித்தனர்.

விரைந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளைஞர் சதீஷை தேடி வருகின்றனர். இதற்கு முன்னரும் இதுபோன்ற சம்பவம் ஒன்றில் அதே கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவர் மாயமாகிவிட்டார். அவரை போலீசார் பல இடங்களில் தேடியும் இன்றுவரை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 168

0

0