தூய்மையான தீபாவளியை கொண்டாடி இயற்கையை போற்றுவோம் : நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து

14 November 2020, 10:44 am
Ramnath Kovind - Updatenews360
Quick Share

தீபாவளியை முன்னிட்டு இந்திய மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள அவர், இந்த புனிதமான நாளில் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் வாழும் சக குடிமக்கள் அனைவருக்கும் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக பதிவிட்டுள்ளார்.

மகிழ்ச்சி மற்றும் ஒளியின் இந்த மகத்தான திருவிழா நம் நாட்டின் ஒவ்வொரு வீட்டிற்கு மகிழ்ச்சியையும், அமைதியையும் செழிப்பையும் தரட்டும். இந்த தீபாவளி நம்மை மனித நேயத்துடன சேவை செய்ய தூண்டுகிறது. இந்த சந்தர்ப்பத்தில் ஒரு விளக்கு அதன் ஒளியை பகிர்வதன் மூலம் பல விளக்குகளை ஒளிர செய்வது போல நம் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதன் மூலம் சமூகத்தின் ஏழை ஆதரவற்ற மக்களுக்கு நம்பிக்கை மற்றும் செழிப்பின் விளக்காக மாற தீர்மானிப்போம். இந் தூய்மை யான பண்டிகையை மாசு இல்லாத, சுற்றுச்சூழலுடன் இணைந்த தூய்மையான தீபாவளியை கொண்டாடுவதன் மூலம் இயற்கை அன்னையை போற்றுவோம் என பதிவிட்டுள்ளார்.

Views: - 29

0

0