பெங்களூர் கலவரம் : செய்தியாளர்களைத் தாக்கியது இஸ்லாமியக் கும்பல் தான் போலீஸ் அல்ல..! சுவர்ணா செய்தி நிறுவனம் விளக்கம்..!
15 August 2020, 2:07 pmபெங்களூருவில் சமூக ஊடக பதிவினைக் காரணம் காட்டி இஸ்லாமிய கும்பல் ஒன்று நடத்திய வன்முறையை மூடி மறைக்கும் விதமாக, தங்களுடைய பத்திரிகையாளர்கள் பெங்களூர் நகர காவல்துறையினரால் தாக்கப்பட்டதாகக் கூறிய எடிட்டர்ஸ் கில்ட் அறிக்கையை, சுவர்ணா செய்தி ஊடகம் மறுத்துவிட்டது.
ஆகஸ்ட் 11 இரவு வன்முறையில் ஈடுபட்ட கும்பலால் சேனலின் பத்திரிகையாளர்கள் உண்மையில் தாக்கப்பட்டனர் என்று சுவர்ணா நியூஸின் தலைமை ஆசிரியர் ரவி ஹெக்டே தனது அறிக்கையில் தெளிவுபடுத்தினார்.
மூன்று சுவர்ணா செய்தி நிருபர்கள் கும்பலால் தாக்கப்பட்டனர் மற்றும் இரண்டு செய்தி வாகனங்கள் மற்றும் ஒரு கேமராவையும் வன்முறையில் ஈடுபட்ட கும்பல் சேதப்படுத்தியது. அவர்கள் மீது பெங்களூர் நகர போலீசில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மறுபுறம் எடிட்டர்ஸ் கில்ட் தனது ஆகஸ்ட் 13 அறிக்கையில், “பெங்களூரில், இந்தியா டுடேவைச் சேர்ந்த நான்கு பத்திரிகையாளர்கள், தி நியூஸ் மினிட் மற்றும் சுவர்ணா நியூஸ் 24 எக்ஸ் 7 ஆகியவை நகர காவல்துறையினரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.” எனத் தெரிவித்திருந்தது.
இந்த அறிக்கையில் பெங்களூரு சம்பவத்தை, சட்ட அமலாக்க நிறுவனங்களின் தோல்வி என்று கூறியதுடன், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியது.
ஆகஸ்ட் 11’ஆம் தேதி இரவு, கிழக்கு பெங்களூரின் சில பகுதிகளில் ஒரு முஸ்லீம் கும்பல் பேஸ்புக் பதிவில் முகமதுவை இழிவுபடுத்துவதாகக் கருதி வன்முறையில் ஈடுபட்டனர். இதற்கிடையே தீவிர இஸ்லாமிய அமைப்பான பி.எஃப்.ஐயின் அரசியல் அமைப்பான எஸ்.டி.பி.ஐ., இந்த வன்முறையில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.