டெல்லியில் இன்று தொடங்குகிறது ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டம்….!!

29 November 2020, 7:30 am
shangaai manadu - updatenews360
Quick Share

புதுடெல்லி: 6 நாடுகளின் பிரதமர்கள் பங்கேற்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டம் டெல்லியில் இன்று தொடங்குகிறது.

இந்தியா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷியா, பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகளின் அமைப்புகளை உள்ளடக்கியது, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு. இந்த நாட்டு தலைவர்களின் 19வது கூட்டம், டெல்லியில் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்துக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தலைமை தாங்குகிறார்.

காணொலி காட்சி வழியாக நடைபெறும் இந்த கூட்டத்தில் ரஷியா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 6 நாடுகளின் பிரதமர் கலந்துகொள்கிறார்கள். பாகிஸ்தான் சார்பில் அதன் வெளிவிவகாரங்களுக்கான நாடாளுமன்ற செயலாளர் கலந்து கொள்கிறார். ஆப்கானிஸ்தான், பெலாரஸ், ஈரான், மங்கோலியா ஆகிய 4 நாடுகளின் பிரதிநிதிகள் பார்வையாளர்களாக கலந்துகொள்ள உள்ளனர்.

இதில் உறுப்பு நாடுகளின் வர்த்தக, பொருளாதார செயல்திட்டம் குறித்து விவாதிக்கப்படுகிறது. நாளை கூட்டு பிரகடனத்துடன் இந்த கூட்டம் நிறைவு பெறுகிறது. கடந்த 10ம் தேதி இந்த அமைப்பின் உச்சிமாநாடு, ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வழியாக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

Views: - 17

0

0