நிலவில் விழுந்து நொறுங்கிய விண்கலம்… 47 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த சோகம் : விஞ்ஞானிகள் முயற்சி தோல்வி!!

Author: Udayachandran RadhaKrishnan
20 August 2023, 3:12 pm
Luna - Updatenews360
Quick Share

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக லூனா-25 என்ற விண்கலத்தை கடந்த 10ம் தேதி ரஷியா விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலத்தை நாளை நிலவின் தென் துருவத்தில் தரையிறக்க திட்டமிட்டு இருந்தது.

கடந்த 17ம் தேதி நிலவின் சுற்றுவட்ட பாதைக்குள் ரஷிய விண்கலம் வெற்றிகரமாக நுழைந்தது. தொடர்ந்து படிப்படியாக சுற்றுப்பாதையை குறைக்கும் பணிகள் நடந்து வந்தன.

ஆனால், திட்டமிட்டபடி நிலவில் இந்த விண்கலத்தை தரையிறக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. திடீரென விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இறுதிக்கட்ட சுற்றுப்பாதையை குறைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளதாக ரஷிய விண்வெளி நிறுவனம் கூறியது.

இந்தந்லையில் நிலவுக்கு ரஷியா அனுப்பிய லூனா 25 விண்கலம் நிலவில் மோதியது. லூனா 25- விண்கலத்துடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்த ரஷிய விஞ்ஞானிகள் முயற்சித்த நிலையில் இந்த திட்டம் தோல்வி அடைந்தது.

நேற்றைய தினம் லூனா 25-ன் சுற்றுவட்டப்பாதையை குறைக்கும் போது தொடர்பு துண்டிக்கப்பட்டது. நிலவில் மோதியதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது ரஷிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்

Views: - 757

0

0