அஜாக்கிரதையுடன் சாலையை கடந்த இளைஞர் : கண்ணிமைக்கும் நேரத்தில் தூக்கி வீசிய காட்சி!!
Author: Udayachandran RadhaKrishnan29 August 2021, 2:04 pm
தெலுங்கானா : ஐதராபாத் அருகே சாலையை கடக்க முயன்ற போது இளைஞர் மீது வேன் மோதி விபத்து ஏற்படுத்திய சிசிடிவி காட்சி வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகர போலீஸார் பொதுமக்கள் விழிப்புணர்வுக்காக சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ளனர்.
இந்த காட்சியில் ஒரு நபர் சாலையை கடக்க முயன்ற போது சாலையில் வேகமாக வந்த வேன் ஒன்று அவர் மீது மோதி தூக்கி வீசி எறியப்படுகிறார்.
இந்த காட்சிகள் தற்போது இணையத்தல் வைரலாகி வருகிறது. பொதுமக்கள் சாலையை கடக்கும் போது விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
Views: - 320
0
0