மக்களை மகிழ்விக்க நடனமாடிய இளைஞர் : சுருண்டு விழுந்து பலியான அதிர்ச்சி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
13 September 2021, 9:32 am
Youth Dead When Dance -Updatenews360
Quick Share

ஆந்திரா : அனந்தபுரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியில் நடனமாடி கொண்டிருந்த இளைஞர் சுருண்டு விழுந்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்டத்திலுள்ள கௌதமபுரி கிராமத்தில் நேற்று இரவு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதே கிராமத்தைச் சேர்ந்த குள்ளயப்பா (வயது 25) விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்டு தெலுங்கு பட பாடல் ஒன்றுக்கு நடனமாடிக் கொண்டிருந்தார். நடனம் ஆடிக் கொண்டிருக்கும் போதே அப்படியே கீழே விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.

அங்கிருந்த நபர்கள் அவரை தூக்கி கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர் உயிரிழந்ததாக தெரிவித்ததையடுத்து வீட்டிற்கு தூக்கி சென்றனர்.

விநாயகர் சதுர்த்தி விழாவில் கிராம மக்களை மகிழ்விக்க நடனம் ஆடிய இளைஞர் நிகழ்ச்சியில் சுருண்டு விழுந்து இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 226

0

0