காதலித்து திருமணம் செய்த பின் பெற்றோரை விட்டு வர மறுத்ததால் பெண்ணை கத்தியால் குத்திய இளைஞன்

19 January 2021, 9:57 pm
Quick Share

ஆந்திர: காதலித்து திருமணம் செய்த பின் பெற்றோரை விட்டு வர மறுத்ததால் பெண்ணை கத்தியால் இளைஞன் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கங்காதர் நல்லூர் அருகில் உள்ள துர்ப்புபள்ளி கிராமத்தைச் சேர்ந்த காயத்ரி(19), சிந்தாமாக்குலா பள்ளியைச் சேர்ந்த டில்லி பாபு(19) ஒரே கல்லூரியில் படித்து 2 வருடமாக காதலித்து வந்தனர். இதற்கு பெற்றோர் மறுப்பு தெரிவிக்கவே இவர்கள் திருப்பதி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதனை அறியாத பெண் வீட்டார் மகளை காணவில்லை என்று கங்காதர்நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் அளித்ததன் பேரில் விசாரணை ஈடுபட்ட காவல்துறையினர் பெண்ணையும் டில்லிபாபுவையும் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து வந்தனர்.

இருவருக்கும் திருமணம் ஆன நிலையில் காவல்துறையினர் டில்லி பாபுவிற்கு 21 வயது ஆகும் வரை இருவரையும் தனித்தனியாக அவர் அவரது வீட்டில் வசிக்கும் படி தெரிவித்தார். ஆனால் இதற்கு ஒத்து வராத டில்லிபாபு காயத்ரியை தன் வீட்டிற்கு வரும்படி வற்புறுத்தினார். தான் வர இயலாது என காயத்ரி கூறியதால் ஆத்திரமடைந்த டில்லிபாபு தெனுமூர் என்ற இடத்தில் பைக்கில் சென்ற காயத்ரியை கத்தியால் குத்தினார். இதனை அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று காயத்ரியை வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே காயத்ரி பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தில்லி பாபுவின் வீட்டின் மீது மக்கள் அனைவரும் தாக்குதல் நடத்தினர். இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி மக்கள் அனைவரும் கேட்டுக்கொண்டனர் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 0

0

0