இமாச்சல பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை: முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் தகவல்..!!

22 June 2021, 8:56 am
Quick Share

சிம்லா: இமாச்சல பிரதேச மாநிலத்தில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை என மாநில முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் கூறியுள்ளார்.

கொரோனா பெருந்தொற்றை வேரறுப்பதற்காக இந்தியாவில் கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி திட்ட பணிகளுக்கான திருத்திய வழிகாட்டு நெறிமுறைகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

தடுப்பூசி போட தொடங்கிய நாள் முதல் நாளிலேயே 82 லட்சம் தடுப்பூசி போடப்பட்டு சாதனை படைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இமாச்சல பிரதேச முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,

Corona_Vaccine_UpdateNews360

18-45 வயதினற்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு குறைந்தது 1 லட்சம் டோஸ்கள் போட இலக்கு வைத்துள்ளோம். இதுவரை மாநிலத்தில் 27.35 லட்சம் டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தில் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு இல்லை.

தற்போது சுமார் 5 லட்சம் டோஸ்கள் கையிருப்பில் உள்ளது. ஜூன் 25க்குள், லஹால்-ஸ்பிட்டி போன்ற பழங்குடியினர் மற்றும் பிற பகுதிகளில் 100% மக்களுக்கு முதல் டோஸ் மூலம் தடுப்பூசி போடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

Views: - 158

0

0