தாகமாக இருக்கும் யானை, சுயமாக கை பம்பை அடிக்கும் காட்சி – வைரலாகும் வீடியோ

2 May 2021, 4:49 pm
Quick Share

தாகமாக இருக்கும் யானை, யாருடைய உதவியும் இன்றி கை பம்பை சுயமாக அடித்து தண்ணீர் அருந்தும் காட்சி, சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

யானைகள் என்றாலே, நமக்கு அதன் ஞாபகத்திறன் மற்றும் அறிவுக் கூர்மை தான் நினைவிற்கு வரும். யானை, நிலத்தில் வாழும் பெரிய மூளை கொண்ட விலங்கு ஆகும். யானைகளுக்கு, மனிதர்களை உள்ளதுபோன்று 3 மடங்கு நியூரான்கள் உள்ளன. யானை, மனிதர்களை போன்றே எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளக்கும் வீடியோ, சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
தாகமாக இருக்கும் யானை ஒன்று, யாருடைய உதவியும் இன்றி, கை பம்பை அடித்து தாக சாந்தி செய்து கொள்கிறது. இதை அங்கிருந்த 3 பேர் வேடிக்கை பார்ப்பது போன்று உள்ள வீடியோ, நெட்டிசன்களால் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

https://www.india.com/viral/viral-video-thirsty-elephant-operates-hand-pump-on-his-own-to-drink-water-desi-style-wins-internet-watch-4626413/

இந்த வீடியோ எந்த பகுதியில் இருந்து எடுக்கப்பட்டது என்பது தெரியாத நிலையிலும், யானையின் அறிவுத்திறன் மற்றும் ஸ்டைலான அணுகுமுறை உள்ளிட்ட காரணங்களால், இந்த வீடியோ பெறுமளவில் அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.
யானையின் திறமை குறித்து சிறிதும் அறியாதவர்களுக்கு கூட, இந்த வீடியோவை பார்த்தால், அதன் செயல்பாடுகள், அதில் உள்ள நேர்த்தி, அதன் ஸ்டைல் உள்ளிட்ட விபரங்களின் மூலம், யானைகளின் அறிவுக் கூர்மை, நினைவுத்திறன் உள்ளிட்ட அதன் சிறப்பியல்புகள் தெரிய வரும் என்பதை யாராலும் மறக்கேவா அல்லது மறுக்கவோ இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 65

0

0

Leave a Reply