வீட்டின் மீது இடி விழுந்து தீ விபத்து : படிப்புக்காக நிலத்தை விற்று வைத்திருந்த ரூ.20 லட்சம் ரொக்கம் கருகிய சோகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 September 2021, 4:32 pm
Savings Amount Burn -Updatenews360
Quick Share

ஆந்திரா : கல்வி செலவுக்காக வீட்டில் வைக்கப்பட்டிருந்த 20 லட்ச ரூபாய் இடிவிழுந்து தீப்பற்றி எரிந்து கருகி நாசமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் சிந்தல்பூடி மண்டலம் குருபட்லகூடம் கிராமத்தை சேர்ந்தவர் மகேஷ் பாபு. மகேஷ்பாபு விவசாயத்துறையில் உயர்கல்வி கற்பதற்காக தன்னுடைய நிலத்தை விற்று 20 லட்ச ரூபாய் பணம் வாங்கி வந்து வீட்டில் வைத்திருந்தார்.

இன்று அதிகாலை அந்த பகுதியில் கனமழை பெய்த நிலையில் மகேஷ்பாபு வீடு மீது இடி விழுந்து மின்னல் தாக்கியது. மின்னல் தாக்குதலில் வீடு சேதம் அடைந்த நிலையில் அங்கு வைக்கப்பட்டிருந்த 20 லட்ச ரூபாய் பணமும் எரிந்து கருகி சேதமடைந்தது.

கல்வி செலவுக்கு தேவையான பணத்திற்காக இனி என்ன செய்வோம் என்று மகேஷ்பாபு, அவருடைய குடும்பத்தினர் ஆகியோர் அழுது புலம்புகின்றனர்.

Views: - 334

0

0