திருப்பதியில் இலவச தரிசனம் செய்வதற்கான டிக்கெட்: இன்று முதல் விநியோகம்…!!

26 October 2020, 9:11 am
Tirupathi temple updatenews360
Quick Share

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனம் செய்வதற்கான டிக்கெட் விநியோகம் இன்று முதல் தொடங்கியுள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக திருமலை திருப்பதி கோயிலிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் 11ம் தேதி கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதால், மீண்டும் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை செய்யப்பட்டது.

இதன் காரணமாக, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழக்கமாக நடைபெறும் பிரம்மோற்சவ விழாக்கள் பக்தர்கள் இன்றி நடைபெற்றது. இந்நிலையில் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று நாள்தோறும் 3,000 பக்தர்களுக்கு இலவச தரிசன டோக்கன் வழங்க தேவஸ்தான நிர்வாகம் முன் வந்துள்ளது.

அதன்படி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனம் செய்வதற்கான டிக்கெட் விநியோகம் இன்று தொடங்கியது. இன்று டிக்கெட் பெறும் பக்தர்கள் நாளை ஏழுமலையானை இலவசமாக தரிசனம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 30

0

0