பற்களால் காரை கடித்து இழுத்து சென்ற புலி : வைரல் வீடியோ!!
16 January 2021, 7:54 pmகர்நாடகா : உயரியல் பூங்காவில் பழுதாகி நின்ற கார் ஒன்றை பற்களால் கடித்து இழத்த புலியின் காட்சி வைரலாகி வருகிறது.
கர்நாடக மாநிலம் பெங்கரூரு புறநகர் பகுதியில் உள்ள பன்னேர்கட்டா உயிரியல் பூங்காவிற்கு 5பேர் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது பூங்காவில் உள்ள வனப்பகுதியில் சென்று கொண்டிருந்த வாகனம் திடீரென பழுதாகி நின்றது.அப்போது அங்கிருந்த 5 வயது புலி ஒன்று தாவிக் குதித்து பாதுகாப்பு வாகனம் அருகே வந்தது.
வாகனத்தில் உள்ள பின்பக்க பம்பரை கடித்து சில தூரம் வெறும் பற்களால் கடித்து இழுத்து விளையாடியது. இந்த காட்சிகள் வாகனத்தில் உள்ளவர்கள் தங்கள் செல்போன்களில் படம் பிடித்தனர். சுமார் 2 மாதங்களுக்கு முன்பு இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது இந்த காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
0
0