சாதி, மத பேதத்தை இணைத்த காதல் : இணையத்தை எமோஷனலாக மாற்றிய ஐ.ஏ.எஸ் தம்பதியின் திடீர் அறிவிப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan12 August 2021, 5:34 pm
இணையத்தை கலக்கிய இணைகளான டீனா டாபி, அதார் அமீர்கான் ஜோடி பற்றி தெரியாதவர் யாருமே இருக்க முடியாது. அந்தளவுக்கு இருவரும் பெயர்களும் ஒரு சில காலம் இணையத்தில் வைரலாகின. ஆனால் தற்போது அப்படியே எதிர்வினையாகியுள்ளது. இருவரும் விவாகரத்து வாங்கியுள்ள செய்திதான் இப்போது மீண்டும் வைரலாகி வருகிறது.
கடந்த 2015ஆம் ஆண்டு நடந்த ஐஏஎஸ் தேர்வில் முதலிடம் பெற்றவர் தான் மணப்பெண்ணான டீனா டாபி, அதே போல இரண்டாவது இடம் பெற்றவர் தான் மணமகன் அதார் அமீர்கான். ஐஏஎஸ் தேர்வில் முதலிடம் பெற்ற பட்டியலினப் பெண் என்ற பெருமையையும் டீனா பெற்றார்.
முசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி அகாடமியில் ஐஏஎஸ் பயிற்சியின் போது இருவரும் இடையே காதல் மலர்ந்தது. கண்டதும் காதல் என்று சொல்வார்களே அது இதுதானோ என டீனா கூட கூறியிருந்தார். காலையில் தான் இருவரும் பார்த்தோம், மாலையில் அவர் காதலை சொல்லிவிட்டார்.
இவர்களின் காதலுக்கு பலர் கொண்டாடக்காரணம், அதார் கான் இஸ்லாமியர், டீனா ஓர் இந்து. ஆனால் எவ்வளவு வரவேற்பு இருந்ததோ அந்தளவுக்கு எதிர்ப்பு இருந்தது. இந்து மகாஜன் சபா இவர்களது திருமணத்தை எதிர்த்தது.
ஆனால் எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் சரி திருமணம் செய்ய துணிந்த ஜோடி 2018ஆம் ஆண்டு திருமணமும் செய்தனர். மதநல்லிகணத்துக்கு எடுத்துக்காட்டு என நாடு முழுவதும் புகழ் பரவ.. இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய அமைச்சர்கள், அப்போதைய மக்களை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
ஆனால் இந்த ஜோடியின் மீது என்ன கண்பட்டதோ தெரியவில்லை.. கடந்த வருடம் நவம்பர் மாதம் ஜெய்ப்பூர் குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்துக்காக மனு தாக்கல் செத்னர். இருவரும் மனமுவந்து விவாகரத்து செய்ய கோரிக்கை விடுத்ததால் நீதிமன்றமும் விவாகரத்து வழங்கியுள்ளது.
சாதி, மத பேதத்தை வென்று வந்த இந்த காதல், திருமணம் என்ற பந்தத்திற்கு பிறகு முடிவுக்கு வந்தது ஏன் என்ற காரணம் வெளியாகவில்லை. ஆனால் இந்த ஜோடியின் பிரிவுக்கு நெட்டிசன்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள டீனா டாபி, நீங்கள் என்ன செய்தாலும் யாரேனும் சிலர் உங்களை பற்றி பேசிக்கொண்டுதான் இருக்க போகிறார்கள். அதனால் நீங்கள் உங்கள் வாழ்க்கைக்கு மகிழ்ச்சி சேர்க்கும் விஷயங்களை மட்டும் செய்யுங்கள், வாழ்க்கையை வாழுங்கள் என கூறியுள்ளார்.
0
0