10 நாட்களில் ரூ.40.25 கோடி உண்டியல் வருமானம்… திருப்பதியில் சொர்க்கவாசல் பிரவேச தரிசனத்திற்கு குவிந்த கூட்டம்…!!

Author: Babu Lakshmanan
2 January 2024, 1:03 pm
Quick Share

கடந்த 10 நாட்களில் சொர்க்கவாசல் பிரவேச தரிசனம் மூலம் திருப்பதி கோவிலுக்கு 40 கோடியை 25 லட்ச ரூபாய் காணிக்கை வருமானம் கிடைத்துள்ளது.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கடந்த 23ஆம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் திறக்கப்பட்ட சொர்க்கவாசல் நேற்று ஒன்றாம் தேதி இரவு 12 மணிக்கு அடைக்கப்பட்டது. ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறந்திருந்த கடந்த 10 நாட்களில் 6 லட்சத்து 47 ஆயிரத்து 452 பக்தர்கள் ஏழுமலையானை வழிபட்டு சொர்க்கவாசல் பிரவேசம் செய்தனர்.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 10 நாட்களுக்கும் சேர்த்து 7 லட்சத்து 76 ஆயிரத்து 930 பக்தர்களுக்கு டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் 6 லட்சத்து 47 ஆயிரத்து 452 பக்தர்கள் மட்டுமே கோவிலுக்கு வந்து ஏழுமலையானை வழிபட்டு சொர்க்கவாசல் பிரவேசம் செய்தனர். டிக்கெட் வாங்கியவர்களில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 390 சுவாமி பக்தர்கள் கோவிலுக்கு வரவில்லை.

கூடுதலாக தேவஸ்தான ஊழியர்களின் பரிந்துரை அடிப்படையில் 37 ஆயிரத்து 668 பேருக்கும், அறங்காவலர் குழு உறுப்பினர்களின் பரிந்துரைகள் அடிப்படையிலும், முக்கிய பிரமுகர்களுக்கும் 66 ஆயிரத்து 998 டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. வைகுண்ட ஏகாதசி பத்து நாட்களில் 40 கோடியே 25 லட்ச ரூபாய் உண்டியல் வருமானமாக கிடைக்கப்பெற்றது. அதேபோல், 35 லட்சத்து 60 லட்சம் லட்டுகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Views: - 286

0

0