திருப்பதியில் நடந்த ஆழ்வார் திருமஞ்சனம் : பிரம்மோற்சவ பணிகள் தீவிரம்!!

15 September 2020, 1:07 pm
Tirupati Festival - updatenews360
Quick Share

ஆந்திரா : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 19ஆம் தேதி துவங்கி 27 ஆம் தேதி வரை 9 நாட்கள் ஏழுமலையானின் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம், ஆனி வார ஆஸ்தானம், உகாதி, வைகுண்ட ஏகாதசி ஆகிய திருநாட்களுக்கு முன் வரும் செவ்வாய் கிழமைகளில் ஆழ்வார் திருமஞ்சனம் என்ற பெயரில் ஏழுமலையான் கோவிலை முழுவதுமாக கழுவி சுத்தம் செய்வது நடைமுறையில் இருக்கும் வழக்கம்.

அதன் அடிப்படையில் இம்மாதம் 19ஆம் தேதி பிரம்மோற்சவம் துவங்க இருப்பதால் இன்று ஏழுமலையான் கோவிலுக்கு கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்பட்டது.அப்போது கோவில் தங்க கோபுரம் முதல் கருவரை, மடப்பள்ளி என அனைத்து பகுதிகளும் கழுவி சுத்தம் செய்யப்பட்டன.

தொடர்ந்து மஞ்சள், சந்தனம், நாமக்கட்டி, ஜவ்வாது ஆகிய உள்ளிட்ட பல்வேறு சுகந்த திரவியங்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பசை கோவில் சுவர்களுக்கு பூசப்பட்டது. தொடர்ந்து ஏழுமலையானுக்கு புதிய பட்டாடைகள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் சிறப்பு பூஜைகளுக்கு பின் பக்தர்கள் காலை 10 மணி முதல் ஏழுமலையானை வழிபட அனுமதி அளிக்கப்பட்டது.