திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா: சிறப்பு பூஜைகளுடன் அங்குரார்ப்பணம்
18 September 2020, 10:45 pmதிருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவையொட்டி கோவில் முழுவதும், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் நாளை மாலை கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற இருக்கும் நிலையில், இன்று பிரம்மோற்சவத்தின் பூர்வாங்க நிகழ்ச்சியான அங்குரார்ப்பணம் நடைபெற்றது. அங்குரார்ப்பணத்தை முன்னிட்டு ஏழுமலையானின் சேனை முதல்வன் உற்சவர் விஷ்வகேசவலுவை கோவிலில் உள்ளரங்க நாயகர் மண்டபத்தில் எழுந்தருளி செய்த அர்ச்சகர்கள் சிறப்பு பூஜைகளுடன் அங்குரார்ப்பணம் செய்வித்தனர்.
தொடர்ந்து முளைப்பாரியிடல் நடைபெற்றது. கொரோனா பெரும் தொற்று காரணமாக கோவிலுக்கு உள்ளேயே ஏகாந்தமாக பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. எனவே ஏழுமலையானை தரிசிப்பதற்காக 100 ரூபாய் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருக்க மக்கள் மட்டுமே மலைக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.