புரட்டாசி சனிக்கிழமையன்று வெறிச்சோடிய திருப்பதி கோவில் : கொரோனா கட்டுப்பாடால் பக்தர்கள் வருகை குறைந்தது!!

Author: Udayachandran RadhaKrishnan
18 September 2021, 12:55 pm
Tirupati Crowd - Updatenews360
Quick Share

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள், இலவச தரிசன டோக்கன்கள் பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றன. இதனால் திருப்பதி மலையில் பக்தர்கள் வருகை மிகவும் குறைந்த அளவிலேயே தொடர்ந்து காணப்படுகிறது.

புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் திருப்பதி மலைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். ஆனால் கொரேனா கட்டுப்பாடுகள் காரணமாக குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே ஏழுமலையானை வழிபட அனுமதி அளிக்கப்படுகிறது.

300 ரூபாய் தரிசனம், இலவச தரிசனம் ஆகியவை உள்ளிட்ட வகைகளில் தினமும் சுமார் 20 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே சாமி தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதுதவிர டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வரும் பக்தர்கள் மட்டுமே திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்ல முடியும் என்ற நிலையும் உள்ளது.

எனவே புரட்டாசி மாத சனிக்கிழமையில் ஏழுமலையான் தரிசனம் கிடைக்காவிட்டாலும் ஏழுமலையான் கோவிலில் கோபுர தரிசனமாவது செய்யலாம் என்று கருதும் பக்தர்கள் திருப்பதி மலைக்கு செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே வழக்கமாக புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் காணப்படும் நிலை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்த ஆண்டும் காணப்படவில்லை. எனவே புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை ஆன இன்று திருப்பதி மலை வெறிச்சோடி காணப்படுகிறது.

Views: - 169

0

0