எந்த கட்சிக்கு ஓட்டு போட்டாலும் தாமரைக்கு விழுகிறது..! தோல்வி பயத்தில் குற்றம் சாட்டும் திரிணாமுல் கட்சி..?

Author: Sekar
27 March 2021, 9:49 pm
TMC_EVM_glitch_UpdateNews360
Quick Share

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்டம் வாக்குப்பதிவு இன்று 30 தொகுதிகளில் நடைபெற்று முடிந்துள்ளது. முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7:00 மணிக்கு தொடங்கிய சில மணி நேரங்களில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஈ.வி.எம் இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.

ஆளும் திரிணாமுல் கட்சி, மாநிலத்தில் மூன்றாவது முறையாக வெற்றிபெற கடுமையாக போராடுகிறது. எனினும் திரிணாமுல் கட்சி மீதான அதிருப்தி அலை, பல தலைவர்கள் பாஜக பக்கம் தாவியது போன்ற காரணங்களால் மிக மோசமான நிலையில் தேர்தலை எதிர்கொள்கிறது.

இந்நிலையில் ட்விட்டரில் ஈ.வி.எம் செயலிழப்பு என்ற குற்றச்சாட்டை எழுப்பி திரிணாமுல் காங்கிரஸ் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “காந்தி தக்ஷின் சட்டசபைத் தொகுதியில் வாக்காளர்கள் திரிணாமுல் கட்சிக்கு வாக்களித்தனர். ஆனால் வி.வி.பி.ஏ.டி அவர்களுக்கு பாஜக சின்னத்தை காட்டியது” என்று அதிர்ச்சியூட்டும் கூற்றை கூறியது. இது குறித்து உடனடியாக விசாரிக்க தேர்தல் ஆணையத்திடம் அது கேட்டுக் கொண்டது.

முன்னதாக கடந்த காலங்களில் கூட காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட பெரும்பாலான எதிர்க்கட்சிகள் தாங்கள் தோல்வியடையும்போது இதுபோன்ற கருத்துக்களை முன்வைத்து வந்ததோடு, தாங்கள் வெளிச்சந்தையில் வாங்கிய ஒரு சில ஈவிஎம் இயந்திரங்களில் ஹேக் செய்தும் காட்டியது. 

ஆனால் பின்னர் இந்திய தேர்தல் ஆணையம் ஹேக்கத்தான் எனும் பெயரில் அரசியல் கட்சிகளுக்கு சவால் விடுத்து, தன்னிடம் உள்ள ஈவிஎம் இயந்திரங்களை ஹேக் செய்து காட்டுமாறு கூறிய போது, எந்த கட்சியும் வாய்திறக்கவில்லை. இதன் மூலம் தோல்வியடையும் எதிர்க்கட்சிகள் வழக்கமான அரசியலுக்காக பேசக்கூடிய விஷயங்கள் தான் இது என பலமுறை நிரூபிக்கப்பட்டுவிட்டது.

மேலும் இந்திய தேர்தல் ஆணையமும், வெளி உலகத்துடன் நெட்வொர்க்கிங் இல்லாத தனித்த இயந்திரங்களாக இருப்பதால், ஈ.வி.எம்-களை ஹேக்கிங் செய்வது சாத்தியமில்லை என்று ஒவ்வொரு முறையும் உறுதிப்படுத்தியுள்ளது. 

எனினும் கூட, ஒவ்வொரு முறையும் தாங்கள் தோல்வியடையப் போவதாக எதிர்க்கட்சி உணரும்போது, ​​அவர்கள் இதுபோன்ற ஈவிஎம் மோசடி எனும் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார்கள் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மேற்குவங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் உள்ளிட்ட பலரும், திரிணாமுல் கட்சியும் மம்தா பானர்ஜியும் தோல்வி பயத்தில் உள்ளதால் இதுபோன்ற குற்றச்க்காட்டுகளை முன்வைத்து மக்களிடையே தேர்தல் மீதான அவநம்பிக்கையை ஏற்படுத்தி வருவதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.

Views: - 194

0

0