தமிழக துணை முதலமைச்சருடன் அமைச்சர்கள் திருப்பதி பயணம் : ஏழுமலையானை தரிசித்து தேவஸ்தான ஜீயரிடம் ஆசி!!

Author: Udayachandran
10 October 2020, 10:48 am
tirupati Darshan- Updatenews360
Quick Share

ஆந்திரா : தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அமைச்சர்களுடன் திருப்பதி ஏழுமலையானை வழிபட்டனர்.

புரட்டாசி மாதத்தின் நான்காவது சனிக்கிழமை ஆன இன்று தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், நகராட்சி நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டம் துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் விஐபி பிரேக் தரிசனத்தில் திருப்பதி ஏழுமலையானை வழிபட்டனர்.

சாமி கும்பிட்ட பின் அவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் கோவிலில் உள்ள ரங்கநாயகி மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்கள், நினைவுப் பரிசுகளாக வழங்கப்பட்டன.

தொடர்ந்து ஏழுமலையான் கோவில் முன் இருக்கும் பகுதியில் தேங்காய் உடைத்து வழிபாடு நடத்திய துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர், திருப்பதி மலையில் உள்ள பெரிய ஜீயர் மடத்திற்கு சென்று தேவஸ்தான ஜீயரிடம் ஆசி பெற்றனர்.

Views: - 55

0

0