கேரளாவில் படிப்படியாக குறையும் கொரோனா பாதிப்பு: இன்று 9,735 பேருக்கு கொரோனா தொற்று

Author: kavin kumar
5 October 2021, 10:49 pm
TN corona -Updatenews360
Quick Share

கேரளாவில் இன்று புதிதாக மேலும் 9,735 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மிகப்பெரும் அளவில் குறைந்துள்ள நிலையில், கேரளாவில் மட்டும் தினசரி கொரோனா பாதிப்பு மற்ற மாநிலங்களைவிட மிக அதிக அளவில் பதிவாகி வந்தது. இதனையடுத்து கேரள அரசு கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மிகப்பெரும் அளவில் குறைந்துள்ள நிலையில், கேரளாவில் மட்டும் தினசரி கொரோனா பாதிப்பு மற்ற மாநிலங்களைவிட மிக அதிக அளவில் பதிவாகி வந்தது. இதனையடுத்து கேரள அரசு கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இந்த நிலையில், கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்தது.

இந்தநிலையில் கேரளாவில் இன்று 9,735 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 47,38,818 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1,24,441 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று மேலும் 13,878 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 45,88,084 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 151 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 25,677 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 93,202 கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

Views: - 172

0

0