நாடு முழுவதும் தொடங்கியது 10 மாநில சட்டசபைக்கான இடைத்தேர்தல்…!!

3 November 2020, 8:14 am
10 state election - updatenews360
Quick Share

பீகார் சட்டசபை தேர்தலை தொடர்ந்து நாடு முழுவதும் 10 மாநில சட்டசபைக்கான இடைத்தேர்தல் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

புதுடெல்லி: நாட்டில் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே முதன்முறையாக பீகார் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான 2ம் கட்ட தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்கு பதிவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

தேர்தல் நடக்கும் பகுதிகளில் முக கவசம், சமூக இடைவெளி, கிருமி நாசினி, வாக்காளர்களுக்கு ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் கையுறை வழங்குதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பீகார் சட்டசபை தேர்தல் தவிர்த்து, நாடு முழுவதும் 10 மாநில சட்டசபைக்கான இடைத்தேர்தலும் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதன்படி, மத்திய பிரதேசம்-28, குஜராத்-8, உத்தர பிரதேசம்-7, ஒடிசா, நாகலாந்து, கர்நாடகம் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் தலா 2 தொகுதிகள், சத்தீஷ்கார், தெலுங்கானா மற்றும் அரியானா ஆகிய மாநிலங்களில் தலா 1 தொகுதி என மொத்தம் 54 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று காலை தொடங்கியது.

Views: - 19

0

0