நாட்டில் இன்று தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை மகிழ்ச்சி: பிரதமர் மோடி ட்வீட்

21 June 2021, 11:26 pm
Modi_Meeting_UpdateNews360
Quick Share

டெல்லி: இந்தியாவில் புதிய உச்சமாக இன்று ஒரேநாளில் 69 லட்சத்து 25 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நேற்று 30.30 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில், இன்று அந்த எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. அந்த வகையில் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 69.25 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 28 கோடியை கடந்துள்ளது.இந்தியாவில் புதிய உச்சமாக இன்று ஒரேநாளில் 69 லட்சத்து 25 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், நாட்டில் இன்று கொரோனா தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை புதிய உச்சமடைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. கொரோனாவுக்கு எதிரான மிகப்பெரிய ஆயுதமாக தடுப்பூசி உள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். அதிகப்படியான மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள கடினமாக உழைக்கும் முன்கள பணியாளர்களுக்கு வாழ்த்துக்கள். சிறப்பாக செயல்படுகிறோம் இந்தியா’ என தெரிவித்துள்ளார்.

Views: - 143

0

0