டோக்கியோ ஒலிம்பிக் இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

9 July 2021, 10:21 pm
Quick Share

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் இந்திய வீரர்களுடன் ஜூலை 13ம் தேதி பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்துரையாடுகிறார்.

மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற 23-ந்தேதி முதல் ஆகஸ்ட் 8-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியாவைச் சேர்ந்த 120க்கும் மேற்பட்ட வீரர்கள் தகுதிப் பெற்றுள்ளனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்கள்- வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி 13-ந்தேதி கலந்துரையாடுகிறார். அன்று மாலை 5 மணிக்கு காணொலி காட்சி மூலம் நடைபெறும் கலந்துரையாடலில் வீரர்கள்- வீராங்கனைகளுடன் மோடி பேசுகிறார். அப்போது அவர்களை ஊக்கப்படுத்த உள்ளார். மேலும் ஒலிம்பிக்கில் பதக்கங்களை வெல்ல வீரர்கள் – வீராங்கனைகளுக்கு வாழ்த்தும், ஆதரவும் தெரிவிக்கிறார்.

Views: - 122

0

0