பீகாரில் 78 தொகுதிகளில் நாளை இறுதிகட்ட தேர்தல்….!!

6 November 2020, 8:35 am
bihar-updatenews360
Quick Share

பீகார் சட்டசபையில் 78 தொகுதிகளில் நாளை மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.

பாட்னா: பீகாரில் நடைபெற்று வரும் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜனதா கூட்டணி அரசின் பதவிக்காலம் முடிவடைவதால், அங்கு சட்டசபை தேர்தல் நடக்கிறது. கடந்த மாதம் 28ம் தேதி முதல்கட்ட தேர்தலும், கடந்த 3ம் தேதி இரண்டாவது கட்ட தேர்தலும் நடந்து முடிந்தது.

இதனைதொடர்ந்து, நாளை 3வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி, தேர்தல் நடைபெறும் 19 மாவட்டங்களில் அடங்கியுள்ள 78 சட்டசபை தொகுதிகளில் நேற்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது.

இந்த மூன்றாம் கட்ட தேர்தலுக்கு உட்பட்ட தொகுதிகளில் பிரதமர் மோடிதேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மாதேபுரா, அரேரியா ஆகிய மாவட்டங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார், எதிர்க்கட்சி கூட்டணியின் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ், லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பஸ்வான், அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் அசாதுதின் ஒவைசி ஆகியோர் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

Views: - 18

0

0