கங்கனா விசயத்தில் தேவையில்லாமல் வம்பிழுத்து மூக்குடைத்துக் கொள்ளாதீர்கள்..! சிவசேனாவுக்கு சரத் பவார் எச்சரிக்கை..!

9 September 2020, 7:16 pm
sharad_pawar_updatenews360
Quick Share

பாலிவுட் நடிகை கங்கனா ரனவத்தின் “மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உணர்கிறேன்” என்ற கூற்றுக்கு தேவையற்ற முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) தலைவர் சரத் பவார் தெரிவித்தார்.

அண்மையில் மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு, மூவி மாஃபியாவை விட நகர காவல்துறைக்கு தான் அஞ்சுவதாகக் கூறியதையடுத்து, ரனவத் சர்ச்சையில் சிக்கிய பின்னர் அவரது அறிக்கை வந்தது.

முன்னதாக இன்று, சிவசேனா மும்பை மாநகராட்சி மூலம் கங்கனா ரனவத் அலுவலகத்தை இடிக்கும் முயற்சியை மேற்கொண்டது.

ரனவத் மற்றும் மகாராஷ்டிரா அமைச்சர்கள் இடையே அவரது கருத்துக்கள் தொடர்பாக நடந்து வரும் வார்த்தைப் போரில் அரசியல் பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கங்கனா ரனவத் ட்விட்டரில் மும்பை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்ட இடிப்பு நடவடிக்கைகளின் புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டார். 

இந்நிலையில் அவர் இன்று பிற்பகல் 3 மணியளவில் மும்பையை அடைந்தார். முன்னதாக, மகாராஷ்டிரா அரசியல்வாதிகளை விமர்சித்ததற்காக அவதூறாக பேசிய ரனவத், “ராணி லக்ஷ்மிபாயின் தைரியம், வீரம் மற்றும் தியாகத்தை நான் படம் மூலம் வாழ்ந்திருக்கிறேன். எனது சொந்த மகாராஷ்டிராவுக்கு வருவதைத் தடுக்கப்படுவது வருத்தமளிக்கிறது.

நான் ராணி லக்ஷ்மிபாயின் காலடிகளை பின்பற்றுவேன். யாருக்கும் பயப்படவோ, வணங்கவோ மாட்டேன். தவறுக்கு எதிராக நான் தொடர்ந்து குரல் எழுப்புவேன், ஜெய் மகாராஷ்டிரா, ஜெய் சிவாஜி.” என ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளார்.  

சிவசேனா கட்சியினர் மும்பையில் கங்கனா ரனவத்துக்கு எதிராக மேற்கொள்ளும் அட்டூழியங்களைக் கண்டு மக்கள் அதிருப்தியடைந்து வருவதால், மகாராஷ்டிர ஆளும் கூட்டணி அரசாங்கத்தில் ஒரு அங்கமாக உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், தேவையில்லாத விசயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அசிங்கப்பட வேண்டாம் என எச்சரித்துள்ளார்.

“மும்பை போலீஸ் மற்றும் அதன் திறன்களைப் பற்றி நாம் அனைவரும் அறிவோம். யாராவது மும்பையை பாகிஸ்தான் அல்லது ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டால் நாம் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மும்பை குறித்த கங்கனாவின் அறிக்கைக்கு தேவையற்ற முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது” என்று என்சிபி தலைவர் கூறினார்.

Views: - 8

0

0