தாஜ்மஹாலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்த மர்ம போன் கால்..! சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றம்..!

4 March 2021, 11:28 am
Taj_Mahal_UpdateNews360
Quick Share

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் நினைவுச்சின்னத்திற்குள் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு மிரட்டல் தொலைபேசி அழைப்பு வந்ததையடுத்து, தாஜ்மஹாலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து, தாஜ்மஹாலில் சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு விட்டனர் மற்றும் வளாகத்திற்கு வெளியே கடைகள் மூடப்பட்டுள்ளன. வெடிகுண்டு தாஜ்மஹாலை முழுமையாக சல்லடை போட்டு தேடி வருகின்றனர்.

உத்தரபிரதேச காவல்துறையின் அவசர உதவி என்னான 112’க்கு கால் செய்து பேசிய மர்ம நபர், தாஜ்மஹாலில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பது குறித்து தகவல் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து நினைவுச் சின்னங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களை பாதுகாக்கும் சி.ஐ.எஸ்.எஃப் படையும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. 

இதற்கிடையே கால் செய்து வெடிகுண்டு எச்சரிக்கை விடுத்த நபரின் இருப்பிடம் ஃபிரோசாபாத்தில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஒருபக்கம் வெடிகுண்டு நிபுணர்கள் தாஜ்மஹால் வளாகத்தை சோதனை செய்து வரும் நிலையில், வெடிகுண்டு எச்சரிக்கை விடுத்தவரை கண்டுபிடிக்க காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருவதாக ஆக்ராவின் எஸ்.பி. சிவ் ராம் யாதவ் தெரிவித்தார்.

“இராணுவ ஆட்சேர்ப்பில் முரண்பாடுகள் இருப்பதாகக் கூறி ஒரு நபர் அவர்களை அழைத்ததாக கட்டுப்பாட்டு அறையிலிருந்து எங்களுக்கு தகவல் கிடைத்தது, அவர் தான் ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு செய்யப்படவில்லை என்று கூறியுள்ளார்.

பின்னர் தாஜ்மஹாலில் ஒரு குண்டு வைக்கப்பட்டுள்ளது, அது விரைவில் வெடிக்கும் எனக் கூறியுள்ளார். இதையடுத்து தாஜ்மஹாலைச் சுற்றி பாதுகாப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.” என ஆக்ரா எஸ்.பி சிவ் ராம் யாதவ் மேலும் தெரிவித்தார்.

Views: - 18

0

0