டிராக்டர் கவிழ்ந்து பெண்கள் உட்பட 5 பேர் பலி : தர்பூசணி அறுவடை செய்ய சென்ற போது சோகம்!!

4 May 2021, 5:12 pm
Tractor Accident -Updatenews360
Quick Share

ஆந்திரா : நெல்லூர் அருகே மீன் குட்டையில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் 3 பெண்கள் உட்பட 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் நெல்லூர் ரூரல் மண்டலம் கோரகண்டுகுரு கிராமத்தில் தர்பூணி பழங்கள் அறுவடை செய்வதற்காக கூலித் தொழிலாளர்கள் டிராக்டரில் சென்று கொண்டிருந்தனர். வேகமாக சென்றுகொண்டிருந்த டிராக்டர் அருகில் இருந்த மீன் குட்டையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்தில் டிராக்டருக்கு அடியில் சிக்கிக்கொண்ட 5 கூலி தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலியானவர்களில் 3 பெண்கள் உட்பட 5 பேர் அடங்குவர்.

இது குறித்து தகவல் அறிந்த நெல்லூர் ரூரல் எம்எல்ஏ ஸ்ரீதர் ரெட்டி, சம்பவ இடத்திற்கு வந்து விபத்து குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். உயிரிழந்தவர்கள் சடலத்தை நெல்லூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

Views: - 56

0

0

Leave a Reply