ஆந்திரா அருகே பெண்ணா நதியில் குளிக்க சென்ற போது சோகம் : நீரில் மூழ்கி இளம் பெண் உட்பட 4 பேர் பலி!!

Author: Udayachandran RadhaKrishnan
25 June 2021, 8:50 pm
Andhra Dead - Updatenews360
Quick Share

ஆந்திரா : கடப்பா மாவட்டத்தில் புஷ்பகிரி அருகே உள்ள பெண்ணாதியில் மூழ்கி ஒரு இளம்பெண் உட்பட 4 பேர் பரிதாபமாக மரணம் அடைந்தனர்.

புஷ்பகிரி பகுதியை சேர்ந்த அப்துல் நசீர் (வயது 18),அனுஷ்கா (வயது 15), ஜாவிரியா (வயது 18) , அப்துல் வாஹித் (வயது 19), ஆகியோர் இன்று அருகில் ஓடும் பெண்ணா நதியில் இறங்கி குளித்து விளையாடி கொண்டிருந்தனர்.

அப்போது ஜாவிரியாவை தண்ணீர் இழுத்து சென்றதாக கூறப்படுகிறது. எனவே உடன் வந்த மற்ற மூன்று பேரும் அவரை மீட்க முயன்றனர். இந்த சம்பவத்தில் 4 பேரும் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டு பரிதாபமாக மரணம் அடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த கிராமத்தினர் போலீசார்,தீயணைப்பு படையினர் ஆகியோரை வரவழைத்து அப்துல் நசீர், அனுஷ்கா, ஜாவிரியா ஆகியோரை இதுவரை மீட்டுள்ளனர். அப்துல் வாகித் உடலை தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்துள்ள புஷ்பகிரி போலீசார் மேலும் விசாரணை நடத்துகின்றனர்.

Views: - 235

0

0