நாடு முழுவதும் செப். 30 வரை ரயில் சேவைகள் ரத்தா..? விளக்கம் சொன்ன ரயில்வே அமைச்சகம்
10 August 2020, 10:10 pmடெல்லி: ரயில் போக்குவரத்து செப்டம்பர் 30 வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவலை ரயில்வே நிர்வாகம் மறுத்துள்ளது.
கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு போக்குவரத்து முடக்கப்பட்டது. ரயில், பேருந்து என அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன.
புலம் பெயர் தொழிலாளர்களுக்காக மட்டும் சிறப்பு ரயில்களை நாடு முழுவதும் ரயில்வே இயக்கி வருகிறது. இந் நிலையில், நாடு முழுவதும் ஆகஸ்ட் 12ம் தேதி வரை அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்தது.
எக்ஸ்பிரஸ், பயணிகள் ரயில், நகர்ப்புற மின்சார ரயில்கள் என அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டது. இந் நிலையில் கொரோனா பரவல் உச்சத்தில் இருப்பதால் அனைத்து வகை ரயில் சேவைகளும் செப். 30 வரை ரத்து என சமூக வலை தளங்களில் தகவல்கள் வெளியாகின.
ஆனால் இந்த தகவலை ரயில்வே நிர்வாகம் மறுத்துள்ளது. அத்தகைய அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை, அனைத்தும் உண்மையில்லை என்று மறுத்துள்ளது. புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உள்பட சிறப்பு ரயில்கள் இயங்குவதில் எந்த தடையும் இல்லை என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
0
0