மரம் முறிந்து முன்னாள் ராணுவ வீரர் பலி : பதை பதைக்க வைத்த காட்சி!!
10 September 2020, 4:20 pmகர்நாடகா : மரக்கிளை முறிந்து விழுந்து முன்னாள் ராணுவ வீரர் உயிரிந்த சிசிடிவி காட்சி வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் ஹஸ்ஸன் மாவட்டத்தில் சக்லேஷ்பூர் தாலுகாவில் முன்னாள் ராணுவ வீரர் படடேல் ஆரேல் என்பவர் தனது நண்பருடன் அருகில் உள்ள கடைக்கு சென்று வெளியே ஒரு மரத்தடியின் கீழ் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது திடிரென மரம் முறிந்து அவர்கள் இருவர் மேலே விழுந்தது. உடனே அருகில் இருந்தவர்கள் மரக்கிளைகளை அகற்றி இருவரையும் மீட்டனர். இதில் படேலின் நண்பர் படுகாயம் அடைந்தார். ஆனால் படேல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார்.
மாண்டியா மாவட்டத்தை சேர்ந்த படேல் தனது நண்பரை பார்க்க சென்ற இடத்தில் இந்த விபத்து நேரிட்டது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி காண்போர் நெஞ்சை பதை பதைக்க வைத்துள்ளது.
0
0