போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் நோட்டாவை முந்த முடியாமல் படு தோல்வியடைந்த சிவசேனா..!

10 November 2020, 4:01 pm
Uddhav_Thackeray_UpdateNews360
Quick Share

பீகார் சட்டமன்றத் தேர்தல் 2020 வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளுக்கும் தற்போதைய உண்மையான நிலவரத்திற்கும் பெரும் வேறுபாடு உள்ளதால் எதிர்க்கட்சியினர் சோகத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது. 

குறிப்பாக இந்த கருத்துக் கணிப்புகள் முதல்வர் கனவோடு வலம் வந்த ஆர்.ஜே.டி தலைவர் தேஜஸ்வி யாதக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

இருப்பினும், பீகார் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் மகாகத்பந்தனுக்கும் என்டிஏவுக்கும் இடையில் கடுமையான மோதல் உள்ளது  என்பதை இப்போது வரையிலான போக்குகள் நிரூபிக்கின்றன.

இது ஒருபுறம் இருக்க, அமெரிக்க தேர்தல் முடிவுகளை பீகார் தேர்தல் கருத்துக் கணிப்புகளுடன் ஒப்பிட்டு பேசி வந்த சிவசேனா, இந்த தேர்தல்களில் பெற்றுள்ள வாக்கு எண்ணிக்கை அவர்களின் மோசமான நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. 

தற்போது வரை எண்ணப்பட்ட வாக்குகளின்படி, சிவசேனா தான் போட்டியிட்ட எந்த தொகுதிகளிலும் நோட்டாவை முந்தமுடியாமல் தத்தளிக்கிறது.

Views: - 51

0

0