மகாத்மா காந்தியின் 74-வது நினைவு தினம்: பிரதமர் மோடி புகழஞ்சலி..!!

30 January 2021, 12:02 pm
pm modi - updatenews360
Quick Share

புதுடெல்லி: தேசத்தந்தை மகாத்மா காந்தியின் கொள்கைகள் பல லட்சம் பேருக்கு தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 74வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதிலும் அவரது திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது, மகாத்மா காந்தியின் கொள்கைகள் பல லட்சம் பேருக்கு தொடர்ந்து உத்வேகம் அளிக்கும். இந்திய சுதந்திர போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த வீரர்களை நினைவு கூர்வோம் என புகழ் அஞ்சலி செலுத்தினார்.

Views: - 18

0

0