திரிபுரா உள்ளாட்சி தேர்தல்… பாஜக அபார வெற்றி… அகர்தலா மாநகராட்சியை ஒயிட் வாஷ் செய்து அசத்தல்..!!

Author: Babu Lakshmanan
28 November 2021, 3:28 pm
BJP_FLAG_UpdateNews360
Quick Share

அகர்தலா : திரிபுராவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் அம்மாநிலத்தை ஆளும் பா.ஜ.க, அமோக வெற்றி பெற்றது.

திரிபுராவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. மாநிலத்தில் மொத்தம் 334 வார்டுகள் உள்ளன. அதில்,112 இடங்களில் பா.ஜ.க வேட்பாளர்கள் போட்டியின்றி வெற்றி பெற்றதால், எஞ்சிய 222 இடங்களுக்கு மட்டுமே தேர்தல் நடந்தது. அகர்தலா மாநகராட்சி மற்றும் 13 உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.

51 வார்டுகளை கொண்ட அகர்தலா மாநகராட்சியில் அனைத்து இடங்களையும் பா.ஜ.க, கைப்பற்றியது. அதேபோல், கோவாய், குமர்ஹட், தர்மபுர், அம்பச மாநகராட்சிகளையும், சப்ரூம் நகர், அமர்பூர் நகர், பனிசகர், ஜிரனியா, சோனாபுரா நகர் பஞ்சாயத்துக்களையும் கைப்பற்றியது. மேலும், பல இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது.

Views: - 295

0

0