பணி நீக்கப்பட்ட ஆசிரியர்களின் போராட்டத்தால் வன்முறை வெடிக்க வாய்ப்பு..? திரிபுரா தலைநகரில் 144 தடை உத்தரவு..!

27 January 2021, 6:07 pm
tripura_UPDATENEWS360
Quick Share

திரிபுராவில் உள்ள அகர்தலா முனிசிபல் கார்ப்பரேஷன் பகுதியில், பணிநீக்கம் செய்யப்பட்ட 10323 ஆசிரியர்களின் கூட்டு இயக்கக் குழுவின் தொடர்ச்சியான கிளர்ச்சியின் காரணமாக 144 தடையுத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஷைலேஷ் யாதவ் பிறப்பித்த தடை உத்தரவின் படி, இன்று காலை 6 மணி முதல் இந்த தடை 24 மணி நேரம் நடைமுறையில் இருக்கும். 

10323 கூட்டு இயக்கக் குழுவின் கிளர்ச்சியாளர்களால் நடந்து வரும் வன்முறை நடவடிக்கைகள் மனித உயிர்களுக்கும் பொதுச் சொத்துக்களுக்கும் ஆபத்து ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

“உடனடி தடுப்பு மற்றும் விரைவான தீர்வு விரும்பத்தக்கது என்பதில் நான் திருப்தி அடைகிறேன். ஆனால் மனித உயிர்கள், பொது சொத்துக்கள் மற்றும் அமைதிக்கு ஆபத்து ஏற்படுவதைத் தடுக்க அகர்தலா முனிசிபல் கார்ப்பரேஷன் பகுதியில் இயக்கத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்க போதுமான அடிப்படை முகாந்திரம் உள்ளது.” என்று மாவட்ட ஆட்சியர் கூறினார்.

எனினும், சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிப்பதில் ஈடுபட்டுள்ள இராணுவம், துணை ராணுவப் படை மற்றும் மாநில காவல்துறையினரின் நடமாட்டம், எஸ்.பி. மற்றும் சதர் துணைப்பிரிவின் எஸ்.டி.எம் ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்ட பொது உறுப்பினர்களின் இயக்கம் ஆகியவற்றிற்கு இந்த தடை உத்தரவு பொருந்தாது. அதிகாரப்பூர்வ கடமைகளை நிறைவேற்றுவதற்காக அரசு ஊழியர்களின் இயக்கம் மற்றும் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளின் இயக்கத்திற்கும் தடை கிடையாது.” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை மீறும் எந்தவொரு நபரின் மீதும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 188’வது பிரிவின் கீழ் வழக்குத் தொடரப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Views: - 0

0

0