சோதனைச்சாவடியில் நிற்காமல் சென்ற தக்காளி ஏற்றி சென்ற லாரி : விசாரணையில் பகீர்.. தமிழகத்தை சேர்ந்த 21 பேர் கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
11 August 2021, 10:09 am
24 Arrest - Updatenews360
Quick Share

ஆந்திரா : தக்காளி லோடு ஏற்றி செல்வது போல் செம்மர கடத்தலில் ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த 24 பேரை கைது செய்த போலீசார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான செம்மர கட்டைகள், கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை பறிமுதல் செய்தனர்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பிலேரு அருகே நேற்று மதியம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்து கொண்டிருந்த ஈச்சர் லாரியை நிறுத்தியபோது நிற்காமல் சென்றது.

துரத்திப் பிடித்த போலீசார் லாரியை சோதனையிட்டபோது அதில் 23 நபர்கள் இருப்பது தெரியவந்தது. மேலும் வாகனத்தில் தக்காளி லோடு ஏற்றி செல்வது போல் செட்டப் செய்து இடைவெளியில் 41 செம்மர கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு கடத்திச் சென்று கொண்டிருப்பது கண்டறியப்பட்டது.

இது தொடர்பாக லாரியில் இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 கூலித்தொழிலாளர்கள் உட்பட 23 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் திருப்பதி அடுத்த கரக்கம்பாடி வனப்பகுதியில் 20க்கும் மேற்பட்டோர் செம்மரங்களை வெட்டி சுமந்து வருவதை அந்தப் பகுதி வழியாக ரோந்து சென்ற போலீசார் பார்த்தனர்.

இதனை அடுத்து அவர்களை பிடிக்க முயன்ற போது ஒருவர் பிடிபட்ட நிலையில் மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர். அவர்கள் விட்டு சென்ற 23 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. முதற்கட்ட விசாரணையில் அவர்கள் அனைவரும் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 281

0

0