திருப்பதி கோவிலின் காணிக்கையை கணக்கிட தனி மாளிகை! இதுக்கே இவ்வளவு கோடியா!!

14 August 2020, 6:05 pm
tirupati Temple- Updatenews360
Quick Share

திருப்பதி : ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் பணம், நகைகளை கணக்கிட 9 கோடி ரூபாய் செலவில் கண்ணாடி மாளிகை கட்ட பூமி பூஜை போடப்பட்டது.

திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக சமர்ப்பிக்கும் பணம், நகைகள் ஆகியவற்றை கோவிலுக்குள் இருக்கும் குறுகலான ஒன்றில் தினமும் சுமார் 250-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கணக்கிடும் பணியில் ஈடுபடுகின்றனர்.

மிகவும் குறுகலான இடத்தில் 250 பேர் அமர்ந்து வேலை செய்வதால் அவர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதாக தேவஸ்தான ஊழியர்கள் கூறுகின்றனர். சரியான காற்றோட்ட வசதி இல்லாத அந்த இடத்திற்கு பதிலாக வேறு ஒரு இடத்தில் காணிக்கை பணத்தை கணக்கிடும் வசதியை ஏற்படுத்த தேவஸ்தான நிர்வாகம் திட்டமிட்டது.

இதற்காக ஏழுமலையான் கோவில் அருகில் இருக்கும் ஒரு பகுதியை தேர்வு செய்து அங்கு சுமார் 9 கோடி ரூபாய் செலவில் காணிக்கைகள் பணம் கணக்கிடு்வதற்கான கட்டிடத்தை கட்ட முடிவு செய்யப்பட்டது. இதுபற்றிய தகவலை அறிந்த ஆந்திராவை சேர்ந்தவரான பெங்களூரில் வசிக்கும் தொழிலதிபர் ஒருவர் மொத்த செலவையும் ஏற்று கொள்ள முன்வந்துள்ளார்.

இந்த நிலையில் காணிக்கை பணம் கணக்கிடுவதற்கான கட்டிடத்திற்கு இன்று பூமி பூஜை நடத்தப்பட்டது.
பின்னர் நிருபர்களிடம் பேசிய தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி, ஏழுமலையான் கோவிலில் தற்போது காணிக்கை பணம் கணக்கிடுவதை பக்தர்கள் பார்க்கும் வகையில் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது.

அதே போல் புதிய கட்டிடத்தில் காணிக்கை பணம், நகைகள் ஆகியவற்றை கணக்கிடுவதை பக்தர்கள் பார்க்கும் வகையில் கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்கும். மேலும் அங்கு இரும்பு லாக்கர்கள், வங்கி கவுண்டர்கள், நன்கொடையாளர்களுக்கான கவுண்டர்கள் ஆகியவையும் ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார்.

Views: - 6

0

0